தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சருக்கு மனித வெடிகுண்டு மிரட்டல்! - மிரட்டல் கடிதம்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வந்துள்ளது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

Letter  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மனித வெடிகுண்டு மிரட்டல் கடிதம்  bomb threat letter to Chief Minister Edappadi Palanisamy  bomb threat  CM Edappadi Palanisamy  மிரட்டல் கடிதம்  மனித வெடிகுண்டு மிரட்டல்
Edappadi Palanisamy

By

Published : Dec 19, 2020, 9:10 AM IST

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. அந்தக் கடிதத்தில், "தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகத் திட்டங்கள் நிறைவேற்றி உள்ளீர்கள். இது தொடர்ந்தால் நான் மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்துவிடுவேன்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

விசாரணை

இது குறித்து அபிராமபுரம் காவல் துறையினர் விசாரணை நடத்தியதில், கே.கே. நகரைச் சேர்ந்த ஏசி மெக்கானிக்காகப் பணிபுரிந்துவரும் பிரவீன் என்பவரது முகவரியிலிருந்து கடிதம் வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, காவல் துறையினர் பிரவீனிடம் விசாரணை மேற்கொண்டபோது, தான் அந்தக் கடிதத்தை அனுப்பவில்லை எனக் கூறினார். பிரவீனை யாரேனும் பழிவாங்குவதற்காக இதுபோன்ற கடிதத்தை எழுதினார்களா? அல்லது பிரவீன் இந்தக் கடிதத்தை எழுதிவிட்டு விசாரணையில் பொய் கூறுகின்றாரா? எனக் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:பெங்களூரு நீதிபதிக்கு மிரட்டல் கடிதம்... இருவரை காவலில் எடுத்து காவலர்கள் விசாரணை!

ABOUT THE AUTHOR

...view details