தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 24, 2020, 3:34 PM IST

ETV Bharat / state

'வெடிகுண்டை இப்படித்தான் கையாள வேண்டும்' - வல்லுநர்களின் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

சென்னை: வெடிகுண்டைப் பார்த்தால் முதலில் இப்படித்தான் செய்ய வேண்டும் என வெடிகுண்டு வல்லுநர்களின் ஒத்திகை நிகழ்ச்சி இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் கொருக்குப்பேட்டை முனையத்தில் நடைபெற்றது.

omb
imb

சென்னை ஆர்.கே. நகர் தொகுதிக்குள்பட்ட இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன கொருக்குப்பேட்டை முனையத்தில், வெடிகுண்டு இருந்தால் அதை எப்படிக் கையாள வேண்டும் என்ற வெடிகுண்டு வல்லுநர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

அதில், சந்தேகப்படும்படி ஒரு பெட்டி தங்கள் அலுவலகத்தில் இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் நிர்வாகி ஒருவர் வெடிகுண்டு வல்லுநர்களைத் தொடர்புகொள்கிறார். உடனடியாக அங்கு விரைந்தசென்ற வெடிகுண்டு வல்லுநர் ஆய்வாளர்கள் ஜெயராமன், வாசுதேவன், உதவி ஆய்வாளர் ஜெயராமுடு, தலைமைக் காவலர்கள் கிரி, பழனி, காவலர் குமரேசன் ஆகியோர் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டைக் கண்டறிந்து செயலிழக்கச் செய்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கொருக்குப்பேட்டை முனையத்தின் துணை பொது மேலாளர் ராம்குமார், முதுநிலை பாதுகாப்பு மேலாளர் கோவிந்தராஜ், முதுநிலை ஆப்பரேஷன் மேலாளர் மீரா, தலைமைக் காவலர் கன்னியப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதைத் தொடர்ந்து, நிறுவனத்தில் பணிபுரியும் ஓட்டுநர்கள், ஊழியர்கள் அனைவருக்கும் ஆய்வாளர் ஜெயராமன் வெடிகுண்டு பற்றிய அறிவுரையும் ஆலோசனையும் வழங்கினார்.

ABOUT THE AUTHOR

...view details