தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு சோதனை! - Bomb checking in airport

சென்னை: உள்நாட்டு விமான நிலையத்தில் வெகுநேரமாக நின்று கொண்டிருந்த காரில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

chennai airport

By

Published : Nov 15, 2019, 7:19 PM IST

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், முக்கிய பிரமுகர்கள் வரும் மூன்றாவது வாயில் அருகே, நேற்று இரவிலிருந்து ’நோ பார்க்கிங்கில்’ கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. இன்று மதியம் வரை யாரும் காரை எடுக்காததால் தகவலறிந்து, மத்திய தொழிற்பாதுகாப்புப் படையினர், விமான நிலைய காவல் துறையினர் விரைந்து வந்தனர்.

அந்தக்காரில், வெடிகுண்டு இருக்குமோ என்ற சந்தேகத்தில், காரின் பின்புற கண்ணாடியை உடைத்து மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்களை வரவழைத்து சோதனை செய்தனர். ஆனால், சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் இல்லாததால் காவல் துறையினர் காரின் பதிவு எண்ணை வைத்து விசாரணை செய்தனர். அதில், காரின் உரிமையாளர் கலாவதி என்றும், அவர் தாம்பரத்தையடுத்த சிட்லபாக்கத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

விமான நிலையத்தில் வெகுநேரமாக நின்று கொண்டிருந்த கார்

அவர் எதற்காக காரை விட்டுச் சென்றார் என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும் காரில் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டதால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க:

விமானத்தின் இருக்கையில் கேட்பாரற்று கிடந்த தங்க கட்டிகள்!

ABOUT THE AUTHOR

...view details