தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ப. சிதம்பரம் வீட்டருகே வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட வழக்கு: 6 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை - 6 sentenced to 5 years in jail

சென்னை: முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வீட்டின் அருகே பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேருக்கு தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

jail
jail

By

Published : Jan 31, 2020, 11:17 AM IST

கடந்த 2014இல் சிவகங்கை மாவட்டம், நாச்சியார்புரம் பகுதியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பண்ணை வீட்டின் அருகே பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இது தொடர்பாக க்யூ பிரிவு காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரனை நடத்திவந்தனர்.

இதில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருசெல்வம் என்ற முரசு, கலை என்ற காளைலிங்கம், தங்கராஜ் என்ற தமிழ் அரசன், கவியரசன் என்ற ராஜா, ஜான் மார்ட்டின் என்ற ஜான், கார்த்திக் என்ற ஆதி ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ப.சிதம்பரம் வீட்டின் அருகே வெடிகுண்டு வழக்கு : 6 பேருக்கு 5 ஆண்டு சிறை

இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகள் விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி செந்தூர்பாண்டி, குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார்.

இதையும் படிங்க: சிஆர்பிஎப் வீரர்கள் இடையே மோதல்; 6 குண்டுகளைத் தலையில் வாங்கி வீரர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details