சென்னை:திருவல்லிக்கேணியில் உள்ள பிரசித்தி பெற்ற பார்த்தசாரதி கோயில் தெப்பக் குளத்தில், 40 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக ஐஸ் ஹவுஸ் காவல் துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஐஸ் ஹவுஸ் காவல்துறையினர், மெரினா தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் குளத்தில் இருந்த பெண் சடலத்தை மீட்டனர்.