தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் உடல் சென்னை வந்தது - போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் மாணவர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் சஷ்டிகுமாரின் உடல் அரசு செலவில் தமிழ்நாடு வந்து சேர்ந்தது.

பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் உடல் சென்னை வந்தது
பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் உடல் சென்னை வந்தது

By

Published : Jan 24, 2022, 9:25 AM IST

தேனி : போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவை சேர்ந்த பாலசேகரன் என்பவரின் மகன் சஷ்டிகுமார் பாலசேகரன். இவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ. மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டப் படிப்பு பயின்று வந்தார்.

கோரிக்கை

15-1-2022 அன்று அருவியில் குளிக்கச் சென்ற போது, சஷ்டிகுமார் நீரில் மூழ்கி இறந்து விட்டதாகவும் தெரிவித்து,அவரது உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினருமான ஓ. பன்னீர்செல்வம், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையுடன் ஒருங்கிணைந்து உரிய நடவடிக்கைகளை எடுத்திடுமாறு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனை முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தியிருந்தார்.

நடவடிக்கை

இதனையடுத்து சஷ்டிகுமாரின் உடலைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வர தேவையான அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல ஆணையம் மூலம், ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறை மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

உடல் ஒப்படைப்பு

இதனைத் தொடர்ந்து, இன்று (24-1-2022) அதிகாலை 02-15 மணியளவில், சஷ்டி குமார் உடல், பிலிப்பைன்ஸ் நாட்டிலிருந்து விமானத்தின் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முதலமைச்சர் இரங்கல்

சஷ்டிகுமார் உடலைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டுவர அரசு ரூ.4 இலட்சம் செலவு செய்யப்பட்டது. மேலும், உடலை சொந்த ஊருக்குக் கொண்டு செல்ல, தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா அமரர் ஊர்தி வாகன சேவையும் ஏற்பாடு செய்து தரப்பட்டது. இதனிடையே உயிரிழந்த சஷ்டி குமாரின் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

Conclusion:ஜல்லிக்கட்டு - மருத்துவமனையில் மாடுபிடி வீரர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details