5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - செங்கோட்டையன் அறிவிப்பு - Board exam for 5th and 8th std cancelled
13:51 February 04
சென்னை: ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், ஐந்து, எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துசெய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
மேலும், ஏற்கனவே உள்ள பழைய முறையே தொடரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2019 செப்டம்பர் 13இல் வெளியான அரசாணை ரத்துசெய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
TAGGED:
செங்கோட்டையன் அறிக்கை