தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இளநிலை யோகா, இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி அறிவிப்பு! - yoga medical science

சென்னை: இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

bnys-courses-counselling-date-announced
bnys-courses-counselling-date-announced

By

Published : Nov 24, 2020, 6:17 AM IST

இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியும், 9 தனியார் கல்லூரிகளும் உள்ளன.

அரசு கல்லூரியில் 60 இடங்களும், தனியார் கல்லூரிகளில் 600க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளில் இருந்து அரசு ஒதுக்கீட்டிற்கு 65 சதவிகித இடங்கள் அளிக்கப்படுகிறது. இந்தப் படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.

இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்டப்படிப்பிற்கு இந்த ஆண்டு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்தனர். அந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியான 2 ஆயிரத்து 2 பேருக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு வரும் 27ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

சென்னை அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு மருத்துவமனை வளாகத்தில் தினமும் காலை 8 மணி முதல் 11 மணி வரை, பகல் 12 மணி முதல் 3 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை என மூன்று பிரிவுகளாக கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

கலந்தாய்வுக்கு 2 மணி நேரம் முன்னதாக மாணவர்கள் வந்துவிட வேண்டும். மேலும், www.tnhealth.tn.gov.in என்ற மக்கள் நல்வாழ்வுத் துறையின் இணையதளத்தில் தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.

இதையும் படிங்க:வறுமையால் வாய்ப்பு இழந்த மாணவிகளின் மருத்துவக் கனவை நிறைவேற்றிய அரசு

ABOUT THE AUTHOR

...view details