கரோனா பெருந்தொற்று நோய் சென்னையில் வேகமாக பரவிவருகிறது. அதனைத் தடுக்க உதவும் வகையில், தேசிய வேளாண் நிறுவனம், பி.என்.ஒய் ஐடி நிறுவனம் ஆகியவை இணைந்து இருபது லட்சம் மதிப்பிலான வெண்டிலேட்டா், சானிடைசா், முகக் கவசங்கள் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் வழங்கின.
இருபது லட்சம் மதிப்பில் கரோனா தடுப்பு உபகரணங்கள் வழங்கிய பி.என்.ஒய் ஐடி - கரோனா நிவாரண பொருட்கள்
சென்னை: தேசிய வேளாண் நிறுவனம், பி.என்.ஒய் ஐடி நிறுவனம் ஆகியவை இணைந்து 20 லட்சம் மதிப்பிலான வெண்டிலேட்டா், சானிடைசா், முகக் கவசங்கள் ஆகிய பாதுகாப்பு உபகரணங்களை சென்னை மாநகராட்சிக்கு வழங்கின.
இதுகுறித்து, பி.என்.ஒய் ஐடி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், “தமிழ்நாடு அரசுடன் இணைந்து கரோனாவை எதிர்க்கும் வகையில், அனைத்து உதவிகளும் செய்து வருகிறோம். முன்னதாக, 21 லட்சத்துகான நிவாரணப் பொருள்களை வழங்கினோம். தற்போது, 20 லட்சம் மதிப்பிலான வெண்டிலேட்டா், சானிடைசா், முகக் கவசங்கள் உள்ளிட்ட நிவாரணப் பொருள்களை வழங்கியுள்ளோம். இதேபோன்று, திருவள்ளுரில் 2 வெண்டிலேட்டா்கள், முகக் கவசங்கள் போன்றவை வழங்கியுள்ளோம்" என்றனர்.
இதையும் படிங்க: பள்ளிகள் ஜூலை மாதம் திறக்க வாய்ப்பு - பள்ளிக்கல்வித் துறை!