தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மார்பக புற்றுநோய்: ஆரம்ப நிலையில் கண்டறியும் “ஈஸிசெக் பிரெஸ்ட்” அறிமுகம் - ஈஸிசெக் பிரெஸ்ட்

மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய புரட்சிகரமான ரத்தப் பரிசோதனை டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் உடன் இணைந்து அப்போலோ கேன்சர் சென்டர் அறிமுகம் செய்ய உள்ளது.

மார்பக புற்றுநோய்: புதிய தொழில்நுட்ப உத்தியாக “ஈஸிசெக் பிரெஸ்ட்” அறிமுகம்
மார்பக புற்றுநோய்: புதிய தொழில்நுட்ப உத்தியாக “ஈஸிசெக் பிரெஸ்ட்” அறிமுகம்

By

Published : Jun 24, 2022, 6:36 AM IST

Updated : Jun 24, 2022, 6:45 AM IST

சென்னை: இந்தியாவில் தனியார் துறையில் சிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக திகழும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், புற்றுநோய் சிகிச்சையில் தொடர்ச்சியான முதலீட்டின் மூலம் மிகநவீன தொழில்நுட்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அறிகுறி தென்படாத நபர்களிடம் உயர் துல்லியத்துடன் ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறியக்கூடிய இரத்தப் பரிசோதனையை டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் ஒத்துழைப்போடு அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் வழங்குகிறது.

இதன்மூலம் உரிய நேரத்தில் நோயறிதலும் மற்றும் உயிர்களை காப்பாற்றுவதற்கான சிகிச்சை வழங்கப்படுவதும் சாத்தியமாகும். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் மற்றும் மார்பக புற்றுநோய் மீதான விவாதங்கள் தொடர்புடைய சமூக விழிப்புணர்வும், புற்றுநோயியல் துறையில் தொழில்நுட்ப மேம்பாட்டு வரலாற்றில் மிக முக்கிய முன்னேற்றங்களுள் ஒன்றுக்கு வழி வகுத்துள்ளது.

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச் செல்ல வேண்டுமென்ற ஆர்வத்தால் உந்தப்படும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ், இச்செயல்திட்ட அறிமுகத்தின் மூலம் புற்றுநோய் தங்களுக்கு வருவதற்கான சாத்தியம் பற்றி சரியான தகவல்களை பெறுவதற்கு பெண்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.

ஈஸிசெக் – பிரெஸ்ட்:இரத்தப் பரிசோதனை மூலம் மிக எளிதான முறையில் புற்றுநோய்க்கான ஸ்கிரீனிங் சோதனைகளை பெண்கள் செய்து கொள்ளலாம். மிகச்சிறிய அளவு இரத்தத்தை பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளும் ஈஸிசெக் – பிரெஸ்ட், புற்றுநோய் வளர்ச்சியில் முதல் கட்டத்திற்கு முன்னதாகவே மார்பக புற்றுநோயைக் கண்டறிவதற்கு உதவும். இந்தியாவில் உள்ள அனைத்து அப்போலோ கேன்சர் சென்டர்களிலும் ஜுன் 22 -ம் தேதி முதல் ஈஸிசெக் பரிசோதனை கிடைக்கும்.

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். பிரதாப் ரெட்டி கூறியதாவது,“புற்றுநோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது பற்றி விழிப்புணர்வை பரப்புகின்ற மற்றும் உலகத்தரத்திலான புற்றுநோய் சிகிச்சையை வழங்குகின்ற செயல்திட்டத்தினை ஒட்டியதாக ஈஸிசெக் பிரெஸ்ட் செயல்திட்ட அறிமுகம் அமைகிறது. உரிய நேரத்திற்குள் நோயறிதலையும் மற்றும் உயிரிழப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான சிகிச்சையையும் உறுதி செய்கின்ற தரமான தொழில்நுட்ப முன்னேற்றம் என்ற இலக்கை நோக்கிய குறிக்கோளில் ஒரு முக்கியமான நிகழ்வாக ஈஸிசெக் பிரெஸ்ட் இருக்கிறது.

டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் உடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒத்துழைப்பு ஒரு புதியபாதை படைக்கும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. மிகச்சிறந்த சிகிச்சை வழிமுறைகளின் மூலம் மார்பக புற்றுநோய்களை கண்டறிவதற்கு அப்போலோ கேன்சர் சென்டர்ஸில் சிறப்பான திறனும், நிபுணத்துவமும் கொண்டிருக்கிறோம்.

வருடத்திற்கு ஒருமுறையாவது சோதனை: குடும்ப பராமரிப்பாளர்களாக முக்கியப் பொறுப்பு வகிக்கும் இந்தியப் பெண்கள் தாங்களாகவே முன்வந்து ஒரு வருடத்திற்கு குறைந்தது ஒருமுறையாவது இச்சோதனையை செய்துகொள்ள வேண்டுமென்றும், இதன்மூலம் மார்பக புற்றுநோய் ஆபத்தில்லாமல் நீங்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்யவும் வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

நோயறிதலிலிருந்து உரிய சிகிச்சை வரை, அனைத்து நேரங்களிலும் நோயாளிகளோடு அவர்களுக்கு ஆதரவாக இருக்கவும் மற்றும் பாதிப்பிலிருந்து மீண்டு குணமடைவதற்கு அவர்களுக்கு கனிவுடன் கூடிய சிகிச்சைப் பராமரிப்பை வழங்கவும் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் உறுதியேற்று அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது.”, என தெரிவித்தார்.

முற்றிய நிலைகளில் கண்டறியப்படும் புற்றுநோய்கள்: டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைவர் ராஜன் டாட்டர் பேசுகையில், “துரதிருஷ்டவசமாக பெரும்பாலான புற்றுநோய்கள் வளர்ந்து முற்றிய நிலைகளிலேயே கண்டறியப்படுகின்றன. இதற்கு பலவீனப்படுத்துகின்ற தீவிர பக்கவிளைவுகள் மற்றும் சிகிச்சைத் தோல்விகள் போன்ற பெரிய அளவிலான இடர்வாய்ப்பைக் கொண்டிருக்கின்ற அதிதீவிரமான மற்றும் அதிகம் செலவாகின்ற சிகிச்சைகள் அவசியமாக இருக்கின்றன.

ஈஸிசெக்-பிரெஸ்ட் என்பது, சர்வதேச ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க ஒத்துழைப்பிற்காக பல ஆண்டுகள் உழைப்பின் பலனாக உருவாக்கப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, மக்கள் மீதான ஆய்வு சோதனைகளில் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் வெற்றிகரமான சிகிச்சைகளுக்கான வாய்ப்புகளும், பாதிப்பிலிருந்து மீண்டு உயிர் பிழைப்பதற்கான விகிதாச்சாரமும் பெரிய அளவில் அதிகரிக்கும்.” என்று கூறினார்.

முன்னேற்றம் :அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் செயலாக்க துணைத் தலைவர் ப்ரீத்தா ரெட்டி பேசுகையில், “ஈஸிசெக் – பிரெஸ்ட் செயல்திட்ட அறிமுகத்தின் மூலம் தங்களது தினசரி பொறுப்புகளிலேயே பரபரப்பாக மூழ்கிவிடுகின்ற பெண்களுக்கு வரக்கூடிய மார்பக புற்றுநோயை எளிதாகவும் மற்றும் ஆரம்ப நிலையிலும் கண்டறிவதை ஏதுவாக்குகின்ற ஒரு மிகப்பெரிய முன்னேற்ற நடவடிக்கையை எடுத்திருக்கிறோம். இந்தியாவில் ஏறக்குறைய 70% பெண்களுக்கு புற்றுநோய் பாதிப்பு வளர்ந்து முற்றிய நிலையிலேயே கண்டறியப்படுகிறது. இப்பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படுவது அவசியமாக இருக்கிறது. அப்போலோவில் ஆரம்ப நிலையிலேயே நோயறிதலுக்கான சுய பரிசோதனை செய்வதன் அவசியத்தை நாங்கள் எப்போதும் முன்னிலைப்படுத்தி ஊக்குவித்து வருகிறோம்.

90% துல்லியத்துடன் மார்பக புற்றுநோயின் ஆரம்ப நிலையை கண்டறிகின்ற இந்த பரிசோதனை திட்டத்தின் மீது டாட்டர் கேன்சர் ஜெனடிக்ஸ் உடன் ஒத்துழைப்பை மேற்கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. ஆரோக்கியமான வாழ்க்கை முறை புற்றுநோய்க்கான ஒருவரது இடர்வாய்ப்பை குறைக்கின்றபோது, ஆரம்பத்திலேயே புற்றுநோயை கண்டறிவதுதான் சிறந்த சிகிச்சையை பெறுவதற்கான மிகச்சிறந்த வழிமுறையாக இருக்கிறது.” என்று கூறினார்.

உயிரிழப்பு விகிதம் : அப்போலோ ஹாஸ்பிட்டல் எண்டர்பிரைசஸ் லிமிடெட் குழும புற்றுநோயியல் மற்றும் சர்வதேச செயல்பாடுகள் பிரிவின் தலைவர் தினேஷ் மாதவன் பேசுகையில், “ஈஸிசெக் -பிரெஸ்ட் செயல்திட்ட அறிமுகத்தின் மூலம் தொடக்கத்திலேயே புற்றுநோயை அடையாளம் காண்பதில் அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மற்றும் டாடார் ஜெனடிக்ஸ் கொண்டிருக்கும் பொறுப்பு வெளிப்படுகிறது. புற்றுநோய் மீது வெற்றி காண்பதில், தொடக்கத்திலேயே பாதிப்பைக் கண்டறிவதுதான் முதல் படிநிலை.

இந்தியாவில் மார்பக புற்றுநோய் உள்ள பெண்களில் அதிக உயிரிழப்பு விகிதம் இருப்பதற்கு ஒரே காரணமாக இருப்பது காலம் தாழ்த்தி முற்றிய நிலையில் மார்பக புற்றுநோயைக் கண்டறிவதுதான். ஈஸிசெக் பிரெஸ்ட் செயல்திட்டத்தின் மூலம் இந்த அடிப்படை பிரச்சனைக்கு தீர்வு காணவும் மற்றும் ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிவதை எளிதாக மாற்றி இருக்கிறோம்” என்று கூறினார்.

புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரிப்பு: மார்பக புற்றுநோய் என்பது, உலகளவில் பெண்கள் மத்தியில் மிகப்பொதுவான நோய் பாதிப்பாக இருக்கிறது. 2020 – ம் ஆண்டில் உலகளவில் புற்றுநோய் நேர்வுகளில் முதலிடத்தில் இருந்த நுரையீரல் புற்றுநோயையும் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் உள்ளது. அனைத்து புற்றுநோய்களின் மொத்த எண்ணிக்கையில் 11.7% என்ற அளவில் 2.3 மில்லியன் பேருக்கு புதிதாக மார்பக புற்றுநோய் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2030 – ம் ஆண்டுக்குள் ஏறக்குறைய 2 மில்லியன் என்ற அளவை கடந்துவிடும் என இதுகுறித்து ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை 1965 மற்றும் 1985-க்கு இடைப்பட்ட காலத்தில் மார்பக புற்றுநோய் நேர்வின் விகிதம் ஏறக்குறைய 50% அதிகரித்துள்ளது. 2016 – ம் ஆண்டில், இந்தியாவில் இது 1,18,000 என மதிப்பிடப்பட்டிருந்தது.

கிடைத்திருக்கும் தரவின்படி 2020 – ம் ஆண்டில் இந்தியாவில் மொத்த புற்றுநோய் நேர்வுகளில் மார்பக புற்றுநோயின் பங்கு 13.5% (1,78,361) மற்றும் அனைத்து உயிரிழப்புகளில் இதன் பங்கு 10.6% (90408) என இருக்கிறது. புற்றுநோய் குறித்தும், ஆரம்ப நிலையிலேயே ஈஸிசெக் பிரெஸ்ட் மூலம் புற்றுநோய் குறித்த காலஅளவுகளில் பரிசோதனை செய்துகொள்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வை உருவாக்கும் செயல்திட்டத்தை அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் மேற்கொண்டு வருகிறது.

ஆரம்பத்திலேயே நோயறிதல் மற்றும் புற்றுநோய்க்கு முழுமையான உயர்தர சிகிச்சை பற்றி சரியாக தகவலை மக்கள் மத்தியில் கொண்டுபோய் சேர்க்க வேண்டிய முக்கிய தேவை இருப்பதை உணர்ந்து அப்போலோ கேன்சர் சென்டர்ஸ் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:12ஆம் வகுப்பிற்கு பின்னர் என்ன படிக்கலாம்? - 'நான் முதல்வன்' திட்டம் மூலம் அறியலாம்!

Last Updated : Jun 24, 2022, 6:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details