சென்னை:கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டை முருகன் கோவில் செல்லும் வழியில் ரவி என்பவர் பட்டாசு குடோன் வைத்து உள்ளார். இந்த குடோனில் பல தொழிலாளிகள் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 29ம் தேதி பட்டாசு குடோனில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குடோனில் வேலை பார்த்து வந்த 9 பேர் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, பட்டாசு குடோன் அமைப்பதற்கான முறையான விதிமுறைகளும், பாதுகாப்பும் இன்றி பட்டாசு குடோன் அமைக்கப்பட்டதால், பட்டாசுகள் தீப்பிடித்து வெடித்து இந்த விபத்து நடந்ததா? அல்லது மின்கசிவு காரணமாக இந்த பட்டாசு குடோன் வெடித்து சிதறியதா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.