மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை லாலா குண்டா, சஜ்ஜா முனுசாமி தெரு, ஜமால் சௌகார் தெரு, D.B.K. தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி இஸ்லாமியர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.