சென்னை: இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்த பின்னர் பாஜக மாநில துணைத் தலைவர் கரு.நாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், 'நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஆ.ராசா தன்னுடைய தகுதியை இழந்து சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசியது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு பிறந்து இருந்தால் நல்ல மகன்கள். இந்துக்களுக்கு பிறந்து இருந்தால் அவர்கள் அனைவரும் விலைமாதுவின் மகன்கள் என அவர் பேசியது ஒட்டுமொத்த தமிழ்நாடு மக்களையும் புண்படுத்தி உள்ளது.
மேலும் ஆ.ராசா மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து திமுகவில் இருந்து நீக்க வேண்டும், இல்லை என்றால் இது முதலமைச்சர் அனுமதியோடு பேசுவதாக தான் அர்த்தம். பாஜகவில் இப்படி பேசியவர்களை வட இந்தியாவில் இடை நீக்கம் செய்துள்ளோம். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இதை இப்படியே பார்த்துக்கொண்டு இருக்க முடியாது. இது ஒட்டுமொத்த இந்துக்களுக்கும் அவமானம்.