தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக பிரமுகர் காருக்கு தீ வைப்பு - சிசிடிவியில் சிக்கிய இருவர் யார்? போலீஸ் விசாரணை - பாஜக பிரமுகர் காருக்கு தீ வைப்பு

மதுரவாயலில் பாஜக பிரமுகரின் காருக்கு சிலர் தீ வைத்த சம்பவத்தில் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி
சிசிடிவி காட்சி

By

Published : Apr 15, 2022, 10:06 PM IST

சென்னை: மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (48). இவர் பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். நேற்று (ஏப்.14) இரவு இவரது வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவருடைய கார் திடீரென தீப்பிடித்து எரிவதைக் கண்டு அக்கம்பத்தினர் தண்ணீர் ஊற்றி அனைத்தனர்.

இதனால், அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார், உடனடியாக மதுரவாயல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தார். இதற்கிடையே அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தார். அதில், ஒரு ஆண், ஒரு பெண் ஆகியோர் காரில் வந்து, சதீஷ்குமார் காருக்கு தீ வைத்தது தெரியவந்தது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், விசாரணையைத் தொடங்கினர். பின்னர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். பின்னர், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர்.

சிசிடிவி காட்சி

மேலும், நேற்று (ஏப்.14) காலை அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவின்போது கோயம்பேட்டில் சிலைக்கு மாலை அணிவித்த விசிக - பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் சதீஷ் குமாரும் பங்கேற்று, வீடு திரும்பியது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இச்சம்பவம் நடந்துள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:இளம்பெண்களை குறிவைக்கும் இன்ஸ்டாகிராம் இம்சையரசன்.... சிக்கிய 30 மாணவிகளின் வீடியோக்கள்...

ABOUT THE AUTHOR

...view details