சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்ரவரி 22) நடைபெற்றுவருகிறது. இதில் திமுக தனிப்பெரும்பான்மையாக 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியுள்ளது.
இதில் தனித்து நின்ற பாஜகவும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளை கணிசமான எண்ணிக்கையில் கைப்பற்றியுள்ளது. அதன்படி, இதுவரை 11 மாநகராட்சிகளில் 21 வார்டுகளைக் பாஜக கைப்பற்றி உள்ளது.
அதன் முழு விவரம்:
திண்டுக்கல் - வார்டு 14 - தனபாலன்
வேலூர் - வார்டு 18 - சுமதி
காஞ்சிபுரம் - வார்டு 21 - விஜிதா
திருப்பூர் - வார்டு 26 - குணசேகரன்
திருப்பூர் - வார்டு 56 - தங்கராஜ்
கடலூர் - வார்டு 28 - சக்திவேல்
தஞ்சாவூர் - வார்டு 31 - ஜெய்சதீஷ்
சிவகாசி - வார்டு 33 - பாஸ்கரன்
ஒசூர் - வார்டு 40 - பார்வதி
மதுரை - வார்டு 86 - ஜே. பூமா