சென்னை அயனாவரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் கலை நிகழ்ச்சிகள், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் முருகன், “பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு சேவை வாரமாக ஏழு நாட்கள் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதில் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் போன்றவற்றை செய்துவருகிறோம். கரோனா காலத்தில் ஒரு கோடி மக்களுக்கு தமிழ்நாடு பாஜக சார்பில் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.