'தண்ணீர் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை' - Chennai
சென்னை: தண்ணீர் பிரச்னைக்கு போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

tamilsai
இது குறித்து தமிழிசை சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, பாஜக அகில பாரத செயல் தலைவராக, ஜே.பி. நட்டா அறிவிக்கப்பட்டு அவர் இன்று பொறுப்பேற்க உள்ளதாகவும், அவருக்கு வாழ்த்து சொல்வதற்காக தற்போது டெல்லி பயணிப்பதாகவும், அவரின் அரசியல் அனுபவம், பாஜக கட்சிக்கு உறுதுணையாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி