தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'வேலூரில் தேர்தல் ஆணையம் சட்டத்துக்கு உட்பட்டுதான் நடக்கிறது' - BJP

சென்னை: வேலூரில் தேர்தல் ஆணையம் சட்டத்துக்கு உட்பட்டுதான் நடக்கிறது என மாநில பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்தார்.

tamilisai

By

Published : Aug 2, 2019, 2:03 PM IST

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது, வேலுார் தேர்தலில் ஸ்டாலின் மீது வழக்கும், கூட்டம் நடந்த மண்டபத்திற்கு பூட்டும் போடப்பட்டுள்ளது குறித்து தங்களின் கருத்து என்ன என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு தமிழிசை,

"தேர்தலென்று வரும்போது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் ஒன்றுதான். ஸ்டாலின் சென்று கூட்டம் நடத்திய மண்டபம் பூட்டப்பட்டதன் மூலம் அதிகாரப்பூர்வமாக அனுமதி பெறவில்லை என்று தெரிகிறது. தேர்தல் என்றால் யாராக இருந்தாலும் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்க வேண்டும்.

அது நடக்காதபோது வழக்கு போடப்பட உள்ளது. முறைகேடான தேர்தல் நடந்ததற்கு காரணமாக இருந்ததும் தாமதமாக தேர்தல் நடக்கக் காரணமாக இருந்ததும் திமுகதான். தேர்தல் ஆணையம் சட்டவிதிகளுக்கு உட்பட்டு நடந்துகொள்கிறது" என்றார்.

தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி
தமிழிசைக்கும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கும் ஏன் அமைச்சர் பதவி வழங்கவில்லை என சீமான் கேள்வி கேட்டது குறித்து தங்களின் கருத்து என்ன? என்ற கேள்விக்கு,எங்களுக்கு அமைச்சர் பதவி ஏன் கிடைக்கவில்லை என்று கேட்ட சீமானின் அக்கறைக்கு நன்றி என பதில் அளித்தார்.

ABOUT THE AUTHOR

...view details