தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'புயல் பற்றி பேச அழகிரிக்கு எந்தத் தகுதியும் இல்லை' - பேட்டி

சென்னை:  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு புயல் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டிளிக்கையில் தெரிவித்தார்.

BJP_TAMILISAI

By

Published : May 4, 2019, 1:38 PM IST

தமிழ்நாடு பாஜக தலைவர் தமிழிசை சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லியில் பரப்புரைக்காக செல்கிறேன். அதன்பின் நான்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரையில் கலந்துகொள்ள உள்ளேன். பாஜக-அதிமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் சூழல் உள்ளது. இது குறித்து ஸ்டாலின் மிகவும் கவலை அடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், பத்திரிகை சுதந்திரம் என்பது முழுமையாக உள்ளது. 1975ஆம் ஆண்டு பத்திரிகையாளர் சுதந்திரத்தை தடுத்தவர்கள் தற்போது பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசும் சூழல் உள்ளது. ஒரு கருத்து சொன்னதற்கு தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்ட சரித்திரம் தமிழ்நாட்டில் உள்ளது. கட்சிக்குள் கருத்து சொல்வதற்கு உரிமை இல்லாத சூழலில் நாம் தற்போது சுதந்திரமாக உள்ளோம் என்றார்.

தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு வேலை மறுக்கப்படுகிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கு, நிச்சயமாக மாநில உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு அனைத்து அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என பதிலளித்தார். மேலும், நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் தமிழ்நாட்டில்தான் அதிகம். கடந்த முறையை விட இந்த முறை அதிக வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அடுத்த முறை அனைத்து குறைகளும் சரி செய்யப்படும் எனவும் கூறினார்.

வராத புயலுக்கு முன்கூட்டியே நிதியுதவி அளிக்கையில், கஜா புயலுக்கு பிரதமர் வரவில்லை. அரசியல் நோக்கத்திற்காகத்தான் இதை செய்வதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்ததற்கு தங்களின் கருத்து என்ன? என்ற கேள்விக்கு,

விமான நிலையத்தில் தமிழிசை பேட்டி

கடலூரில் புயல் வந்தபோது கே.எஸ்.அழகிரி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் எங்கே சென்றனர். புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மன்மோகன் சிங் வந்தாரா? காங்கிரஸ் தலைவர் அழகிரிக்கு புயல் பற்றி பேச எந்தத் தகுதியும் இல்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது செய்த நிவாரண உதவிகள் குறித்து பட்டியலிட முடியுமா? ஆனால், மோடி புயல் பாதித்த முதல் நாளே ட்விட்டரில் தனது பதிவை பதிவு செய்தார் எனக் குறிப்பிட்டார்.

ABOUT THE AUTHOR

...view details