தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

7.5% உள் ஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு: பாஜக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்?

சென்னை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் தமிழ்நாடு அரசின் மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கக் கூடாது எனக் கடிதம் எழுதிய தமிழ்நாடு பாஜக கல்விப் பிரிவுத் தலைவர் நந்தகுமார் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

bjp
bjp

By

Published : Oct 26, 2020, 7:39 PM IST

தமிழ்நாடு அரசின் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்துவது கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளும் ஆளுநரின் செயலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்துவருகின்றனர். அதேபோன்று பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனும், 7.5 விழுக்காடு உள் இட ஒதுக்கீடு மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக கல்விப் பிரிவுத் தலைவர் நந்தகுமார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், "தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7. 5 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தரக் கூடாது. இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தால் நீதிமன்றங்களுக்குச் சென்று தடை கோருவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், இந்தக் கடிதத்திற்கும் பாஜகவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என எல். முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு பாஜக கல்விப் பிரிவுத் தலைவர் நந்தகுமார் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர் தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேசன் சங்கத்தின் பொதுச்செயலாளராகவும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஏ.சி. சண்முகத்துடன் ரஜினி திடீர் ஆலோசனை!

ABOUT THE AUTHOR

...view details