தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'பொருளாதார இட ஒதுக்கீட்டை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்கிறார்' - வி.பி. துரைசாமி குற்றச்சாட்டு - bjp state vice president vp thuraisamy

சென்னை: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் மக்களை திசை திருப்பும் செயலாக பொருளாதார இட ஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்கிறார் என வி.பி. துரைசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வி.பி. துரைசாமி குற்றச்சாட்டு
வி.பி. துரைசாமி குற்றச்சாட்டு

By

Published : Aug 12, 2020, 3:22 PM IST

சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் வி.பி. துரைசாமி இன்று (ஆக.12) செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "யுபிஎஸ்சி தேர்வில் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு 907 மதிப்பெண்கள், ஓபிசி மாணவர்களுக்கு 735 மதிப்பெண், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு 707 மதிப்பெண் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் உண்மைக்கு மாறான செய்தியை வெளியிட்டு வருகிறார்.

சென்னை விமான நிலையத்தில் உள்ள மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் அதிக அளவில் ஆங்கிலத்தில் பேசுகின்றனர். மற்றப்படி அனைவரும் தமிழ் மொழித்தான் பேசி வருகின்றனர். இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கனிமொழிக்கே இந்தி தெரியும். திமுக தலைவர் ஸ்டாலின், மக்களை திசை திருப்பும் செயலாக, பொருளாதார இட ஒதுக்கீட்டை வைத்து அரசியல் செய்கிறார்.

எம்பிபிஎஸ், உயர் கல்வியில் ஓபிசி மாணவர்கள் சேர்க்கை குறித்து, உச்ச நீதிமன்றத்தில் முதலில் பாஜகவும், அடுத்தப்படியாக அதிமுகவும், பாமகவும் வழக்குத் தொடுத்திருந்தனர். ஆனால் திமுக சார்பில் கடைசியாகதான் வழக்கு தொடரப்பட்டது. 27 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது அனைத்து கட்சிகளும் போராடி பெற்றது. ஆனால் திமுக மட்டுமே சுய விளம்பரத்தை தேடி வருகிறது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: எனது நீக்கம் இயற்கை நீதிக்கு எதிரானது' - திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்

ABOUT THE AUTHOR

...view details