தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“வீடுதோறும் வேல் பூஜை செய்து, கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்” - பாஜக மாநில தலைவர் முருகன்! - Bjp murugan

சென்னை: வீடுதோறும் வேல் பூஜை செய்து கந்த சஷ்டி கவசம் ஒலிக்கட்டும் என்று பாஜக மாநில தலைவர் முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் முருகன்
பாஜக மாநில தலைவர் முருகன்

By

Published : Aug 9, 2020, 3:32 PM IST

கந்த சஷ்டி கவசத்தை அவதூறாகப் பேசி கறுப்பர் கூட்டம் என்ற யூ-டியூப் சேனல் வீடியோ வெளியிட்டிருந்தது. இதற்கு அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக மாநில தலைவர் முருகன் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கறுப்பர் கூட்டம் என்ற அமைப்பினர் , தமிழ்க் கடவுள் முருகனை வேண்டிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தும் போக்கை நினைத்து உலகமெங்கும் வாழும் தமிழர்கள் மன வேதனையில் உள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள கோடிக்கணக்கான ஆன்மீக பக்தர்கள், முருக பக்தர்கள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரைக் குழுக்கள் ஆகியோரின் வேண்டுகோளை ஏற்று, பக்தர்கள் அனைவரும் வீடுதோறும் வேல் அல்லது முருகர் படத்தை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கோடிக்கணக்கான பக்தர்களின் ஒற்றுமை உணர்வினை உலகிற்குக் காட்டுவோம். மத நல்லிணக்கத்திற்கு எதிரான சக்திகளை முறியடிப்போம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details