தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

யாதவ மகாசபை தலைவர் மறைவு; பாஜக இரங்கல்! - பாஜக மாநிலத் தலைவர் முருகன்

சென்னை: தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன் யாதவ் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

யாதவ மகாசபை தலைவர் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் இரங்கல்
யாதவ மகாசபை தலைவர் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் இரங்கல்

By

Published : Oct 1, 2020, 5:27 PM IST

தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் கோபாலகிருஷ்ணன் யாதவ் மறைவுக்கு பாஜக மாநிலத் தலைவர் முருகன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “யாதவ மகாசபை தலைவர் கோபால கிருஷ்ணன் யாதவ், மறைந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

யாதவ சமுதாய மக்களுக்கும், தமிழ்நாடு மக்களுக்கும் நல்லதொரு வழிகாட்டியாய் திகழ்ந்த அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அவரது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆத்மா சாந்தியடைய எனது சார்பிலும், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: இந்து முன்னணி நிறுவனர் இராமகோபாலன் மறைவுக்கு கி. வீரமணி இரங்கல்!

ABOUT THE AUTHOR

...view details