தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமாவளவன், ஸ்டாலின் தமிழ்நாட்டில் நடமாட முடியாது - எல் முருகன் காட்டம்! - BJP state president Murugan attack through words on thirumavalavan and MK Stalin

சென்னை: பெண்களை கொச்சைப்படுத்திய திருமாவளவன், அவருக்கு துணை போகும் ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாட்டில் நடமாட முடியாது என பாஜக மாநில தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

திருமா, ஸ்டாலின் தமிழ்நாடில் நடமாட முடியாது -எல் முருகன் காட்டம்!
திருமா, ஸ்டாலின் தமிழ்நாடில் நடமாட முடியாது -எல் முருகன் காட்டம்!

By

Published : Oct 26, 2020, 1:18 PM IST

Updated : Oct 26, 2020, 2:11 PM IST

பாஜக சார்பில் வரும் நவம்பர் 6ஆம் தேதி தொடங்க உள்ள வெற்றிவேல் யாத்திரைக்கான காப்பு கட்டும் நிகழ்வு சென்னை தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் இன்று (அக். 26) நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகளுக்கு பாஜக மாநில தலைவர் எல். முருகன் காப்பு கட்டினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எல். முருகன், “தெய்வமாக வழிபடும் பெண்களை கொச்சைப்படுத்திய திருமாவளவன், அவருக்கு துணை போகும் ஸ்டாலின் ஆகியோர் தமிழ்நாட்டில் நடமாட முடியாது. வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாது. மீறி சென்றால் பெண்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

பட்டியலின மக்கள், பெண்களை கேவலப்படுத்துவோரை கண்டிக்காமல் இருப்பதுதான் திமுகவின் சமூக நீதியா? சமூக நீதியைப் பற்றிப் பேச திமுகவுக்கு எந்த அருகதையும் இல்லை. தவறிழைத்தவர்களை ஸ்டாலின் பாதுகாத்து வருகிறார், அது ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு தகர்ந்துவிட்டது.

டெல்லியில் தினந்தோறும் நடைபெற்று வரும் 2G வழக்கு விசாரணை குறித்த செய்திகள் வெளியில் வரக்கூடாது என்பதற்காகத்தான் மக்களை திசைதிருப்பும் வேலையை திமுக செய்து வருகிறது. வெற்றிவேல் யாத்திரையின் இறுதி நாளான டிசம்பர் 6இல் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பங்கேற்று யாத்திரையை முடித்து வைப்பார்” என்றார்

பாஜக மாநில தலைவர் முருகன் செய்தியாளர் சந்திப்பு

மேலும், பாஜகவினரை சட்டப்பேரவைக்குள் அனுப்பும் வேலையைத்தான் தாம் செய்துவருதாகவும், வரும் சட்டப்பேரவை தேர்தலில், தான் போட்டியிடவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க...ஆதாரில் மாநில மொழிகள் புறக்கணிப்பு: கனிமொழி கண்டனம்

Last Updated : Oct 26, 2020, 2:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details