இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”திமுகவைச் சேர்ந்த மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் பத்திரிகையாளர் சந்திப்பில், 'நாங்கள் என்ன மூன்றாம் தர மக்களா, நாங்கள் என்ன தாழ்த்தப்பட்ட மக்களா?' என்று கூறி பட்டியலின மக்களை அவமானப்படுத்தியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.
தலைமைச்செயலர் தங்களை அவமானப்படுத்திவிட்டதாகப் புலம்பும் அவர்களுக்கு, உரிய விளக்கத்தை தலைமைச் செயலர் அளித்துள்ள நிலையில், தயாநிதி மாறனின் பேச்சு ஒட்டுமொத்த பட்டியலின சமுதாயத்தை மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் அவமானப்படுத்தியுள்ளது; தலைகுனிய வைத்துள்ளது; அதிர்ச்சியளிக்கிறது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் வகையில் பேசியிருப்பது சட்டப்படி குற்றம். இதனைக் கவனத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.