தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"திமுக அரசைக் கண்டித்து பாஜக சார்பில் பிப்.21ஆம் தேதி உண்ணாவிரதம்" - அண்ணாமலை

தமிழ்நாட்டில் நிலவும் சட்ட ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்தும், திமுக அரசைக் கண்டித்தும் வரும் 21ஆம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி நடத்தப்படவுள்ளதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதே நாளில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

BJP
BJP

By

Published : Feb 19, 2023, 7:19 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று(பிப்.19) வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்திருக்கிறது. திமுகவினரின் அராஜகங்களும், அத்துமீறல்களும், குற்றச் செயல்களும், மக்கள் விரோதப் போக்கும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பட்டப் பகலில், நாட்டைக் காக்கும் பிரபு என்கிற ராணுவ வீரர், திமுகவின் நிர்வாகியால் படுகொலை செய்யப்படுகிறார். பாரதிய ஜனதா கட்சியின் பட்டியல் இனப் பிரிவின் தலைவர் தடா பெரியசாமியின் இல்லத்தின் மீதும், கார் மீதும் கொலை வெறி தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.

திமுக அரசு வருவாய்க்காக மக்களை மதுவிற்கு அடிமைகளாக மாற்றிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவன், மது அருந்திவிட்டு வகுப்பிற்கு வந்ததாக, மாவட்ட ஆட்சியரே, மனம் திறந்து பேசி இருக்கிறார். எல்லா மட்டத்திலும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் எளிதாக கிடைக்கின்றன. வயது வித்தியாசமின்றி சிறார்களும் அதை எளிதில் பெற முடிகிறது.

தமிழ்நாடு இருண்ட காலத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வரும் 21ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை அருகிலிருந்து போர் நினைவுச் சின்னம் வரை மெழுகுவர்த்தி ஏந்தி மாபெரும் பேரணி நடைபெற இருக்கிறது.

முன்னதாக, ராணுவ வீரரை நடுத்தெருவில் அடித்துக் கொன்ற திமுகவை கண்டித்து, அதேநாளில் (பிப்.21) காலையில் சிவானந்தா சாலையில், ஓய்வு பெற்ற ராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பொதுமக்கள் பலர் திரளாகக் கலந்து கொள்ளும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற இருக்கிறது.

மக்கள் அனைவரும், ஆட்சியாளர்களையும் அவர்களின் அத்துமீறல்களையும், அராஜகங்களையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை அரசுக்கு உணர்த்துவதற்கு இது ஒரு அரிய சந்தர்ப்பம். மக்களுக்கான இந்த அறப்போராட்டத்தில், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என பாஜக சார்பில் கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிற்பி திட்டம் மூலம் அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி சுற்றுலா

ABOUT THE AUTHOR

...view details