தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அண்ணாமலை மூன்றாம் தர அரசியல்வாதி போல் செயல்படுகிறார் - கே.பாலகிருஷ்ணன் விமர்சனம் - Channar revolt

பத்திரிக்கையாளர் மீது கோபப்பட்ட அண்ணாமலை மூன்றாம் தர அரசியல்வாதி போன்று செயல்படுகிறார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

அண்ணாமலை மூன்றாம் தர அரசியல்வாதி போன்று செயல்படுகிறார் - கே.பாலகிருஷ்ணன்
அண்ணாமலை மூன்றாம் தர அரசியல்வாதி போன்று செயல்படுகிறார் - கே.பாலகிருஷ்ணன்

By

Published : Jan 7, 2023, 4:10 PM IST

சென்னை: தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து தோள் சீலை போராட்டத்தை நடத்திய 200வது ஆண்டு விழாவில் முதலமைச்சரைக் கலந்துகொள்ள நேரில் அழைப்பு விடுத்தார்.

மேலும், கியூபாவின் தந்தை சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா வரும் 17,18ஆம் தேதிகளில் சென்னையில் கலந்துகொள்ளும் நிகழ்வில் கலந்துகொள்ள முதன்மை தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாலகிருஷ்ணன்,
தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தமிழ்நாட்டிற்கும் தமிழ்நாடு மக்களுக்கும் அடாவடித்தனமாக நடந்து வருவதால் அவர் எப்படி தமிழ்நாடு ஆளுநராக நீடிக்க முடியுமெனக் கேள்வி எழுப்பினார்.

மேலும் தமிழ்நாடு என்ற பெயர் சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் செய்த பிறகு வந்தது. அது அனைவருக்கும் தெரிய வேண்டுமெனவும், ஆளுநருக்கு எதிராக தனித் தனியாகப் போராட்டம் நடத்துவதற்குப் பதில் அனைவரும் ஒன்றாக இணைந்து இயக்கமாகப் போராட்டம் நடத்தலாமென திமுக தலைவர் ஸ்டாலினிடம் கூறினேன், அவரும் அதை பரிசீலிப்பதாகக் கூறியுள்ளார். அரசியல் பண்பு என்னவென்றால் தவற்றை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வதுதான். ஆனால் தமிழ்நாடு ஆளுநர் தீவிரமாகச் செயல்படுகிறார்.

அண்ணாமலை தலைமையில் இயங்கும் தமிழ்நாடு பாஜகவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது ஒரு கட்சி சம்பந்தப்பட்டது அல்ல அது குற்ற வழக்கு தொடர்பானது. மேலும் அது குறித்த கேள்விக்குப் பதில் கூறாமல் பத்திரிக்கையாளர் மீது கோபப்பட்ட அண்ணாமலை மூன்றாம் தர அரசியல்வாதி போன்று செயல்படுகிறார் என்றும், தமிழ்நாட்டில் ஆளுநர் ரவியும் அண்ணாமலையும் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.

இதையும் படிங்க: "போகியில் பொருட்களை எரிக்க வேண்டாம்" சென்னை மாநகராட்சி புது முயற்சி!!

ABOUT THE AUTHOR

...view details