தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

செந்தில்பாலாஜி உத்தமர் என முதலமைச்சர் கூறினால் மின்சாரத்துறை பற்றி பேசமாட்டேன் - அண்ணாமலை - செந்தில்பாலாஜி உத்தமர் என முதலமைச்சர் கூறினால்

செந்தில்பாலாஜி உத்தமர் என முதலமைச்சர் கூறினால் மின்சாரத்துறை பற்றி பேசமாட்டேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை

By

Published : Aug 4, 2022, 4:15 PM IST

சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு பாஜக தலைமையகமான கமலாலயத்தில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விலைவாசி உயர்வை பற்றி பதில் அளித்தார். தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். எதிர்கட்சித் எம்.பிகள் உண்மையை ஏற்றுக்கொள்ள முடியாமல் வெளிநடப்பு செய்தனர். பொருளாதார ரீதியாக உலக அளவில் அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் பின்தங்கிய நிலையில் உள்ளது. தற்போது உள்ள நிலையில்
இந்தியா வேகமாக வளரக்கூடிய நாடாக இருந்து வருகிறது. இன்றைய கணக்கின்படி, அதன் வளர்ச்சி 7.4 சதவீதம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் எம்.பிகள் பொய்களை கட்டவிழ்த்து விட்டு இருக்கிறார்கள் என்றார்.

திமுக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை, உண்மைக்கு புறம்பாக முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
ஜி.எஸ்.டி‌ முறையாக இல்லை என்று சொல்கிறார். "ஆட தெரியாதவன் மேடையை பார்த்து கோணல்", என்று சொல்லுவது போல நிதியமைச்சர் பிடிஆர் அறிக்கை உள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்வது முழு பொய் என்றார். மேலும், ஜி.எஸ்.டியில் எந்த மாநிலத்தையும் யாரும் வஞ்சிக்க முடியாது, தமிழ்நாட்டில் ஜி.எஸ்.டி தொகை முழுமையாக வழங்கப்பட்டு விட்டதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், மத்திய அரசு 2021 - 2022 பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்று சொல்லவில்லை. ஆனால், திமுகவினர் தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்று பெட்ரோல், டீசல், எல்.பி.ஜி சிலிண்டர் விலை குறைப்போம் என்று திமுகவின் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு இருக்கிறது எனவும், அதனை நிறைவேற்ற முடியாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டியுள்ளது. இது திமுகவின் ஏமாற்றுவேலை என்றார்.

உலக நாடுகளான அமெரிக்கா 51 சதவீதம், கனடா 51 சதவீதம், பிரான்ஸ் 55 சதவீதம், ஸ்பெயின் 58 சதவீதம் அளவிற்கு பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி இருக்கிறது. ஆனால், இந்தியாவில் 5 சதவீதம் உயர்ந்துள்ளது. அதைகூட, மத்திய அரசு பெட்ரோல் ரூ.17.10, டீசல் ரூ. 14.50
விலையை குறைத்து இருக்கிறது.

ஆனால், திமுக எம்.பி கனிமொழி அவரது அண்ணன் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தொடர்பு கொண்டு, திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதுபோல் குறைக்க சொல்ல வேண்டும். கடந்த 8 ஆண்டுகளில் எந்த மாநிலத்திற்கும் தமிழ்நாட்டை போல் அல்லாமல் ரூ.7.5 லட்சம் கோடி மத்திய அரசு நிதி வழங்கியுள்ளது. எல்.பி.ஜி சிலிண்டர் 100 ரூபாய் குறைப்போம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னது. தமிழ்நாட்டில் உஜ்வலா திட்டத்தின் கீழ் 32 லட்சம் சிலிண்டர் வழங்கப்படுகிறது. ஒரு சிலிண்டர் 200 ரூபாய் மத்திய அரசு குறைந்துள்ளது.

ஒரு சிலிண்டரை ஒரு குடும்பத்தில் 3 பேர் பயன்படுத்துவதாக எடுத்துக் கொண்டால் ஒருகோடி பேர் பயன்பெறுவார்கள். பாஜக ஆட்சி அமைத்து 8 ஆண்டுகளில் 99.8 சதவீதம் பேருக்கு எல்.பி.ஜி சிலிண்டர் பயன்பாட்டிற்கு வந்துவிட்டது. விலைவாசி உயர்வு குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பதிலளித்தார். அதற்கு பதிலளிக்காமல் வெளிநடப்பு செய்த தமிழ்நாடு எம்.பிகள் அனைவரும் தமிழ்நாடு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

5 ஜி அலைக்கற்றை முறைகேடு நடந்துள்ளதாக திமுக எம்.பி ஆ.ராசா குற்றச்சாட்டு உள்ளாரே என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், திமுக எம்.பி ஆ.ராசா புரிதல் இல்லாமல் பேசி இருக்கிறார். 5ஜி அலைக்கற்றை ஏலத்துக்கு அடிப்படை மதிப்பாக 4.3 லட்சம் கோடி ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 5 ஜி அலைக்கற்றையில் 71 சதவீதம் ஏலம் விடப்பட்டுள்ளது. அதில் ரூ. 1 லட்சத்துக்கு 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இவ்வளவு தொகை விற்பனையானது இதுதான் முதல்முறை. ஆ.ராசா எம்.பி, ஆப்பிள் - க்கும் ஆரஞ்சு - க்கும் முடிச்சு போடுகிறார்.

5 ஜி அலைக்கற்றை சம்பந்தமாக, திமுக எம்.பி ஆ.ராசா நாடாளுமன்றத்தில் பேசிய இருக்கவேண்டியது தானே? அவர் மக்கள் மன்றத்தில் பேசுவதை விட நாடாளுமன்றத்தில் பேசவேண்டும். ஏற்கனவே, மத்தியில் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தவர். எந்த அடிப்படையில் ஆ.ராசா இப்படி பேசி வருகிறார் என்று தெரியவில்லை எனவும் 2 ஜி ஊழலை மக்கள் இன்னும் மறைக்கவில்லை என கூறினார். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை ஆதாள பாதாளத்திற்கு தள்ளியவர் இன்றும் ஒரு தொகுதியில் எம்.பி - யாக இருக்கிறார். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை சீர்செய்ய மத்திய அரசு ரூ.40 ஆயிரம் கோடி நிதிவழங்கியுள்ளது.

பாஜக என்றும் மத அரசியல் கிடையாது. திமுக அரசு மேடையில் பேசியது கருத்து சுதந்திரம் என்று தெரிவித்தார்கள் ஆனால் கனல் கண்ணன் பேசியது தவறு என்று சொன்னால் , திமுக பேசியதும் தவறு தான் என்வும் கருத்து சுதந்திரம் என்றால் என்ன? என்ற கேள்வி எழுப்பினார். மேலும், ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வெளியே இருக்கும் அந்த சிலையை அகற்ற வேண்டும் என்று கருத்து கேட்டால் அனைவரும் அகற்ற வேண்டும் என்றுதான் கூறுவார்கள் தெய்வ நம்பிக்கை இருப்பவர்கள் மட்டும்தான் கோவிலுக்கு செல்வார்கள். தெய்வ நம்பிக்கை இல்லாத பொது இடத்தில் சிலை வைக்கட்டும் என கூறினார்.

மின்கட்டணம் குறித்து புகார் கூறும் பாஜக தொண்டர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக என் மீது நடவடிக்கை எடுக்கட்டும் என்ற அவர், அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை ஊழலுக்கு பேர் போன அமைச்சர் என்று அன்று எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது முதலமைச்சர் தெரிவித்து இருந்தார். செந்தில் பாலாஜி உத்தமர் என்று முதலமைச்சர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினால் இனிமேல் அரசியலில் இருக்கும் வரை மின்சாரத் துறையை பற்றி எதுவும் பேச மாட்டேன் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:ரூ.30 கோடி மதிப்பிலான வருவாய் மற்றும் வட்டாட்சியர் அலுவலக கட்டிடங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details