சென்னை: பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான பண்டிட் தீனதயாள் உபாத்யாவின் 106ஆவது பிறந்த நாள் நேற்று (செப்.25) கொண்டாடப்பட்டது. இதையொட்டி தி.நகர் பாஜக அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உருவப் படத்திற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில் பயங்கர முரண்பாடுகள் உள்ளன. இந்த ஆண்டு 150 மாணவர்களோடு எய்ம்ஸ் மருத்துவமனையை திறக்க ஒன்றிய அரசு அனுமதி கொடுத்தும், தமிழ்நாடு அரசு திறக்க வேண்டாம் என முரண்டு பிடிக்கிறது.
அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும்
இது சமூக நீதிக்கு எதிரானது. தனியார் கல்லூரிகளில் படிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் எண்ணம். கல்வி வியாபார சந்தையாக இருந்ததை நீட் உடைத்துள்ளது; இதை ஏ.கே.ராஜன் கமிட்டி ஏன் பேசவில்லை