தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 4, 2021, 7:45 PM IST

ETV Bharat / state

அம்மா உணவகத்தில் திமுகவினர் அட்ராசிட்டி... பாஜக தலைவர் கண்டனம்

சென்னை: முகப்பேரில் உள்ள அம்மா உணவகத்தில் திமுகவினர் நுழைந்து அம்மா உணவக பெயர் பலகை, ஜெயலலிதா புகைப்படத்தை அடித்து நொறுக்கிய சம்பவத்திற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைவர் கண்டனம்
பாஜக தலைவர் கண்டனம்

இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா உணவகம் ஏழை மக்கள் பசியுடன் வாடக் கூடாது என்ற மனிதாபிமான அடிப்படையில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய முத்தாய்ப்பு திட்டமாய் கொண்டு வரப்பட்டது. மிக மிக குறைவான விலையில் ஏழை மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு உணவு அளித்து அம்மா உணவகம் சேவை செய்து வருவதை அனைவரும் அறிந்ததே.

சென்னை மதுரவாயல் பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தின் பெயர் பலகைகள், விலைப்பட்டியல் போன்றவற்றை, திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள், அடித்து நொறுக்கிய வீடியோ காட்சிகளைப் பார்த்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது. அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற சம்பவங்கள் தமிழகத்தில் எந்த இடத்திலும் இனி நடைபெற கூடாது. அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறையை கேட்டுக்கொள்கிறேன்’என்று குறிப்பிட்டுள்ளார்.

பாஜக தலைவர் கண்டனம்

இந்த விவகாரத்தில் தொடர்புடைய திமுக தொண்டர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், பெயர்ப் பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்கவும், சம்பந்தப்பட்டவர்களைக் கழகத்திலிருந்து நீக்கவும் முதலமைச்சராக பதவியேற்கவுள்ள ஸ்டாலின் உடனடியாக உத்தரவிட்டதாக மா.சுப்பிரமணியன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அடித்து நொறுக்கப்பட்ட அம்மா உணவகத்தை சீரமைத்த திமுக!

ABOUT THE AUTHOR

...view details