தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

2021 சட்டப்பேரவைத் தேர்தல்: பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிப்பு! - tn bjp leader l.murugan

2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கை குழுவை தயார் செய்துள்ளது.

bjp
bjp

By

Published : Dec 14, 2020, 9:09 PM IST

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் பாஜக தேர்தல் அறிக்கை குழுவை தயார் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஆயத்தமாகி வருகின்றன. 'விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற பெயரில் திமுக பரப்புரையை தொடங்கியுள்ளது. அதேபோன்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் முதல்முறையாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறார்.

அதனையொட்டி கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையை தொடங்கியுள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணியை பலப்படுத்த அதிமுக பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. நாம் தமிழர் கட்சியினர் தேர்தல் பரப்புரையை செய்து வருகின்றனர்.

பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அறிவிப்பு

இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தேர்தல் அறிக்கை குழுவை தயார் செய்து வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவில் முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா, மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, பேராசிரியர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் ராம ஸ்ரீநிவாசன், மாநில செய்தி தொடர்பாளர் கார்வேந்தன், விவசாய அணி தலைவர் நாகராஜ், தேசிய பொதுக்குழு உறுப்பினர் சசிகலா புஷ்பா, சிறுபான்மையினர் அணியின் மாநில துணைத் தலைவர் ஷா மற்றும் நாச்சிமுத்து ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்த அறிக்கையை தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க:அண்ணா பல்கலைக் கழகத்தில் 700 மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை?

ABOUT THE AUTHOR

...view details