தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாஜக பிரமுகர் கொலை - கொலையாளிகள் கைது - பாஜக பிரமுகர் கொலையாளிகளை தனிப்படை காவல்துறையினர் கைதுசெய்தனர்

சென்னை: பாஜக பிரமுகர் விஜயரகு கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோரை திருச்சி தனிப்படை காவல் துறையினர் சென்னையில் வைத்து கைது செய்தனர்.

BJP party member Vijayaragu murder case
BJP party member murder arrest

By

Published : Jan 29, 2020, 9:49 PM IST

திருச்சி பாஜக பிரமுகர் விஜயரகுவை கடந்த 27ஆம் தேதி முன்விரோதம் காரணமாக மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில் விஜயரகு கொலையில் முக்கிய குற்றவாளிகளான மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய சென்னைக்கு வந்தனர். அவர்கள் தலைமறைவாக இருந்து பொதுகழிப்பிடத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திருச்சி தனிப்படை காவல் துறையினர் மிட்டாய் பாலு அவரது கூட்டாளி சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: 'தேர்வு என்று வந்தால் 2 பெண்கள் தற்கொலைசெய்வது வழக்கம்தான்!' - சொன்னவர் அர்ஜுன் சம்பத்

ABOUT THE AUTHOR

...view details