தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில்தான் மோடிக்கு எதிர்ப்பு அதிகம் - காயத்ரி ரகுராம் - பிரதமர் நரேந்திர மோடியின் 70 வது பிறந்தநாள்

சென்னை: இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மோடிக்கு எதிர்ப்பு அதிகமாக உள்ளது என அக்கட்சியின் நிர்வாகி காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.

காயத்ரி ரகுராம்
காயத்ரி ரகுராம்

By

Published : Sep 17, 2020, 7:49 PM IST

பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்தநாள் பாஜகவினரால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியில் பாஜக கலை மற்றும் பரப்புரை பிரிவு சார்பாக பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கொடியேற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் நடிகையும் பாஜக பிரமுகருமான காயத்ரி ரகுராம் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், நாட்டில் எங்கும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில்தான் மோடிக்கு அதிகமான எதிர்ப்புள்ளது. தமிழ் கடவுள், இந்தி நட்பு மொழி என குறிப்பிட்டவர், இந்தி தெரியாது போடா எனும் டி-ஷர்ட் ட்ரெண்டிடாகிவரும் நிலையில்' தமிழ் எங்கள் வேலன், இந்தி எங்கள் தோழன் எனும் வாசகமடங்கிய டி-ஷர்ட்டை அறிமுகம் செய்துவைத்தார். மேலும் இதனை அணிந்து விளையாடும் வேலன் எனும் கிரிக்கெட் அணி உருவாக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

காயத்ரி ரகுராம்

அங்கு வந்திருந்த பொதுமக்கள் புடவைகளை பெற தகுந்த இடைவெளி இன்றி குவிந்து பெற்றுசென்றனர். மேலும் நடிகை காயத்ரி ரகுராம் முகக் கவசம் அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்றதும், கூட்டத்துடன் புகைப்படம் எடுக்க நிற்கும்போது தான் அணிந்திருந்த முகக் கவசத்தை கழற்றிவிட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தும் சர்சையாகியுள்ளது.

இதையும் படிங்க: 'எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்' - ராஜ்நாத் சிங்

ABOUT THE AUTHOR

...view details