புளூகிராஃப்ட் பதிப்பகம் 'அம்பேத்கர் அண்ட் மோடி' என்ற தலைப்பில் அண்மையில் நூல் வெளியிட்டது. அந்த நூலுக்கு இசையமைப்பாளர் இளையராஜா முன்னுரை எழுதியுள்ளார். அதில், பிரதமர் மோடியை அம்பேத்கர் உடன் ஒப்பிட்டு இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தக் கருத்து தற்போது விவாதப்பொருளாக மாறியுள்ளது. ஒரு தரப்பினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாக நாட்டின் ஆகச்சிறந்த இசைமேதை ஒருவர் பேசவில்லை என்பதற்காக அவமதிப்பதா? இதுதான் ஜனநாயகமா? ஒருவருக்கு மாறுபட்ட கருத்து இருக்கலாம், அதற்காக ஏன் அவரை இழிவுப்படுத்தவேண்டும்? " எனக் கேட்டுள்ளார்.
இளையராஜா கூறியுள்ள கருத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் முதல் பல்வேறு தரப்பினர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வரும் நிலையில், தற்போது ஜெ.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளது இவ்விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
அரசியல் கட்சி தலைவர்கள் பதில்
முன்னதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய அரசியலமைப்புச் சட்டம் கருத்துச் சுதந்திரத்தை அனுமதித்துள்ளது. அதையே இளையராஜாவுக்கு மறுத்ததன் மூலம், தலித் மற்றும் தலித் விரோதப் போக்கை திமுக காட்டுகிறது.