தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கேந்திரிய வித்யாலயா பயிற்றுமொழி விவகாரம்: மு.க. ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய பாஜக நாராயணன்! - பாஜக

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், இனி எந்த மாணவர்களையும் சேர்ப்பதற்கு திமுக எம்பிக்கள் பரிந்துரைக்க மாட்டார்கள் என்பதற்கான உறுதி மேற்கொள்வீர்களா? என பாஜக செய்தித் தொடர்பாளர் நாரயணன் திருப்பதி திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

bjp narayanan question to dmk stalin
மு.க. ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய பாஜக நாராயணன்

By

Published : Nov 15, 2020, 4:54 PM IST

சென்னை:கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எந்த மாணவர்களை சேர்ப்பதற்கு திமுக எம்பிக்கள் இனி பரிந்துரைக்க மாட்டார்கள் என்று உறுதிமொழி மேற்கொள்வீர்களா? என மு.க.ஸ்டாலினுக்கு பாஜக செய்தித்தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.

மொழி அரசியலை முன்னெடுக்கும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு என் கேள்விகள் என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் என்பது பாதுகாப்புத் துறை அலுவலர்களின் குழந்தைகளுக்கு உருவாக்கப்பட்டது என்பதும் பணி மாற்றத்தின் அடிப்படையில் அவர்கள் எங்கு சென்றாலும் ஒரே சீரான பாடத்திட்டத்தில் பயில வேண்டும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்பதும், பின்னர் மத்திய அரசு அலுவலர்களின் குழந்தைகளுக்காக அதே நோக்கத்தில் விரிவுபடுத்தப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் படித்தால் மட்டுமே கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மூன்றாவது மொழி பயிற்றுவிக்கப்படும் என்ற விதி, மாநிலத்திலும் மத்தியிலும் திமுக ஆட்சியில் இருந்த போது இருந்ததா இல்லையா? அப்போது ஏன் எதிர்க்கவில்லை?

மூன்றாவது மொழி பயிற்றுவிக்க தற்காலிக ஆசிரியர்கள் என்பது 40 வருடங்களுக்கும் மேலாக உள்ள நடைமுறை என்பதை மறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா?

தற்போது எந்த நிபந்தனையும் புதிதாக விதிக்கவில்லை என்ற நிலையில், திடீரென்று கொந்தளித்து அறிக்கை விடுவது தேர்தலுக்காக தான் என்பது உண்மைதானே? மலிவான மொழி அரசியலை கல்வித் துறையில் பயன்படுத்துவது தவறானது என்பதை உணர மறுப்பது ஏன்?

புதிய கல்விக் கொள்கையில் தாய்மொழி வழி கல்வி உறுதி என்ற நிலையில், அதை நீங்கள் எதிர்ப்பதற்கு காரணம் தமிழை யாரும் கற்கக் கூடாது என்பதால்தான் அதை திரும்பப் பெறவேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா?

திமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டில் பல கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு மாநில அரசு நிலம் கொடுத்ததா இல்லையா? இனி கேந்திரிய வித்யாலய பள்ளிகளில் எந்த மாணவர்களையும் சேர்ப்பதற்கு திமுக எம்பிக்கள் பரிந்துரைக்க மாட்டார்கள் என்று உறுதிமொழி மேற்கொள்வீர்களா? தமிழ் மீது பாசம் இருப்பது போன்று எவ்வளவு நடிப்பு உங்களிடம்?

மூத்த மொழியாம் எங்கள் தாய்மொழி தமிழை பயன்படுத்தி மலிவு அரசியல் செய்ய கனவிலும் கருதவேண்டாம் தமிழை கொண்டு மக்களை தூண்டிவிட்டு மக்களை பின்னோக்கி தள்ள எண்ணவேண்டாம்" என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:ஓபிசி இட ஒதுக்கீடு தீர்ப்பு பாஜகவின் வெற்றி - நாராயணன்

ABOUT THE AUTHOR

...view details