சென்னை:தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இன்று வனத்துறை (சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனம்), இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. அதில், அமைச்சர்கள் கா.ராமச்சந்திரன், சி.வீ.மெய்யநாதன் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்குப் பதிலுரை வழங்கி புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளனர்.
இந்த நிலையில் சட்டப்பேரவையில் கூட்டத்தொடர் இன்று (ஏப். 25) தொடங்கியதும் கேள்வி நேரத்தின் போது பேசிய பாஜக சட்டப்பேரவை குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்விக்குப் பதில் அளித்த அமைச்சர் பொன்முடி, ’திருநெல்வேலி மாவட்டத்தில் தற்போது ஒரு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 9 அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகளும், 18 சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளும் உள்ளன.
திருநெல்வேலி மாவட்டம், மானூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி வழங்கப்பட்டு 2022-23ஆம் ஆண்டு முதல் செயல்பட உள்ளது. இதைத்தவிர 1 அரசு பொறியியல் கல்லூரியும், 12 சுயநிதி பொறியியல் கல்லூரியும், 1 பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியும் மற்றும் 1 அரசு உதவி பெறும் தொழில்நுட்பக் கல்லூரியும், 14 சுயநிதி தொழில் நுட்பக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகள் தொகுதி மாணவர்களின் உயர்கல்வி தேவைகளை நிறைவு செய்வதால், புதிதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை’ எனத்தெரிவித்தார்.
இதனையடுத்து, திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பேசிய போது, ’இந்த கல்லூரி நமது அரசு வந்த உடன் முதன்முதலில் போடப்பட்டு, அதை உடனடியாக முதலமைச்சர் நிறைவேற்றிக் கொடுத்தார். அதற்கு நன்றி.