தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பனுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு பாஜக மாநிலத் தலைவர் முருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னா விருதானது, 2016ஆம் ஆண்டில் ரியோவில் நடந்த பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது.
வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது சார்பிலும், தமிழ்நாடு பாஜக தொண்டர்கள், தலைவர்கள் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.