இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொறியியல் இளநிலை படிப்புகளை தமிழில் கற்கவும், தமிழிலேயே தேர்வு எழுதவும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சில் முடிவு செய்துள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. தொழில்நுட்பக் கல்வியை தாய்மொழியில் கற்கிற பொழுது தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் அதன் நுட்பத்தை நன்கு அறிந்து, தெரிந்து படிக்கவும், தேர்வு எழுதவும் முடியும்.
கிராமப்புறம், அரசுப் பள்ளி மாணவர்கள் இனி பொறியியல் படிப்புகளில் தயக்கமின்றி சேர்ந்திட முன்வருவார்கள். ஆங்கிலம் முழுமையாகத் தெரியாத காரணத்தினால் பொறியியல் படிப்புகளில் சேர முன்வராத மாணவர்களுக்கு இந்த அறிவிப்பு மிகவும் மகிழ்ச்சியானதாகும். இதன் மூலம் பொறியியல் கல்லூரிகளிலும் கூடுதல் மாணவர்கள் சேர்ந்து கல்வி கற்கும் வாய்ப்பு உருவாகும்.