தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

‘எதிர்க்கட்சிகளின் போராட்டம் மக்களை திசை திருப்பும் செயலாக உள்ளது’ - எல். முருகன் - சென்னை பாஜக முருகன்

சென்னை: விவசாய மசோதா குறித்த எதிர்க்கட்சிகளின் போராட்டம் மக்களை திசை திருப்பும் செயலாக இருக்கிறது, தேச நலனுக்கு எதிராக இருக்கிறது, விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறது என பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் முருகன்
செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் முருகன்

By

Published : Sep 25, 2020, 6:32 PM IST

சென்னை தி. நகரிலுள்ள தமிழக பாஜக கட்சியின் மாநில அலுவலகமான கமலாலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் (ஜனசங்) நிறுவன தலைவர்களில் மூத்ததே தலைவர் தீன்தயாள் உபாத்யாயவின் 105ஆவது பிறந்தநாள் விழாவில் மாநிலத் தலைவர் எல். முருகன் கொடியேற்றி தீன்தயாளின் நினைவைப்போற்றும் வகையில் மலரஞ்சலி செலுத்தினார். இதில் கட்சியின் மூத்தத் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், “பாஜகவை நிறுவியவரில் ஒருவர் தீன்தயாள் உபாத்யாய. அவர்களுடைய சேவை வழியில், கடைசி மனிதனுக்கும் அனைத்து மக்களுக்கும் அனைத்து திட்டங்களும் சேரவேண்டும், அதன் அடிப்படையில் தற்போதைய மத்திய அரசாங்கம் பிரதமர் மோடி, அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், சுகாதாரம், அனைவருக்கும் மருத்துவ காப்பீடு திட்டம், விவசாய நலன், விவசாய பயிர்கள் காப்பீடு திட்டம், விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம், ஜன்தன் திட்டம் இலவச எரிவாயு இணைப்பு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அவர் வழியில் மத்திய அரசு செயல்படுத்திவருகிறது.

வருகின்ற செப். 28ஆம் தேதி எதிர்க்கட்சிகள் வேளாண்மை திட்டத்திற்கு எதிராக, போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இது மக்களை திசை திருப்பும் செயலாக இருக்கிறது. தேச நலனுக்கு எதிராக இருக்கிறது, விவசாயிகளுக்கு எதிராக இருக்கிறது. விவசாயிகள் காலம் காலமாக விவசாய பொருள்களுக்கு அவர்கள் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறார்கள், அதற்கு இந்த சட்டம் வழிவகுக்குகிறது.

ஏற்கனவே தமிழ்நாட்டில் உழவர் சந்தை திட்டம் மூலம் விவாசாய பொருள்களை வணிகரீதியாக விற்பனை செய்து வருகிறது. மேலும், விவசாயிகள் ஆன்லைன் மூலம் விவசாய பொருள்கள் விற்பனை செய்ய முடிகிறது. இது குறித்து விவசாயிகள் மத்தியில் மாற்றம் வந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்னவென்று தெரியாது.

மதுரையில் விவசாயம் செய்யும் மல்லிகைப்பூ, தக்காளி, விவசாய பொருள்களை விவசாயம் செய்யும் விவசாயிகள் நிறுவனங்களுடான ஒப்பந்தம் மூலம் விலை குறைந்தாலும் அதே விலையில் விற்பனை செய்ய முடியும்.

விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும், அவர்களது வாழ்க்கை மேம்படும். மேலும், விவசாயத்தில் அதிக தொழில்நுட்பம் வர இருக்கிறது. விளைச்சல் அதிகரிக்கும், விவசாயிகளின் உற்பத்தியை இரண்டு மடங்கு லாபம் கிடைக்கும்படி விலை நிர்ணயம் செய்யும் படியாக விவசாய மசோதா உள்ளது.

விவசாய மசோதாவை பாராட்டி தமிழக பாஜக முழுமையாக வரவேற்கிறது, இதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். விவசாயிகளின் பொருள்களை நேரடியாக உலகளாவிய விற்பனை செய்ய வழிவகை செய்கிறது.

மேலும், விவசாய பொருள்களை பதப்படுத்த அதிக கிடங்குகளை கொண்டு வரமுடியும், விவசாய பொருள்களை ஏற்றுமதி செய்யமுடியும், இதற்கான உட்கட்டமைப்புகள் உருவாக வாய்ப்புள்ளது.

செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநில தலைவர் முருகன்
விவசாய மசோதாவில் பெருநிறுவனங்கள் என்று சட்டத்தில் சொல்லவில்லை, விவசாயிகள் சேர்ந்த கூட்டுறவு சங்கங்கள், தனி விவசாயி, ஆகிய அனைவரும் சேர்ந்துதான் விலை நிர்ணயம் செய்வார்கள்.

இதற்கான எந்தவித நடைமுறை சிக்கல்களும் இல்லை, மக்களை குழப்பதற்காக எதிர்க்கட்சிகள் தவறாக திசை திருப்பி கொண்டிருக்கிறார்கள். பிரதமர் மோடி ஏற்கனவே தெளிவாக சொல்லி இருக்கிறார். அதாவது Minimum supportive price (MSP) தொடர்ச்சியாக செயல்படும், அதேநேரத்தில் விவசாய பொருள்களை கொள்முதல் செய்வதை இந்தியா உணவுத்துறை நிறுத்தாது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜக தலைவர் வீட்டு முன் அக்கட்சி கொடியை தூக்கிலிட்டு போராட்டம் நடத்திய பெண் கைது!

ABOUT THE AUTHOR

...view details