தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெற்றிவேல் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து முருகன் அறிக்கை - ammk vetrivel died

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவிற்கு பாஜக மாநில தலைவர் எல்.முருகன் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

BJP murugan condolences
BJP murugan condolences

By

Published : Oct 16, 2020, 1:14 AM IST

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

தமிழ்நாடு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வெற்றிவேல் மறைவு மிகுந்த வேதனையை தருகிறது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளராக இருந்தவர். ஆர்.கே.நகர் தொகுதியிலும், பெரம்பூர் தொகுதியிலும் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

எளிய குடும்பத்தில் பிறந்து கடுமையான உழைப்பால் பொது வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்தவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்னாரது ஆத்மா சாந்தியடைய எனது சார்பிலும், தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பிலும் இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதையும் படிங்க:'வெற்றிவேல் மறைவு கட்சிக்கும், எனக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு' - டிடிவி தினகரன்!

ABOUT THE AUTHOR

...view details