தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள் - Banwarilal Purohit

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் சூழலில், பாஜக எம்எல்ஏக்கள், பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து ஒரு மணிநேரம் பேசினர்.

bjp-mla-meet-governor-banwarilal-purohit
ஆளுநர் பன்வாரிலாலைச் சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள்

By

Published : Jun 23, 2021, 6:42 PM IST

சென்னை:பாஜக எம்எல்ஏக்களான நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், சரஸ்வதி, எம்ஆர் காந்தி ஆகியோர் ஆளுநரை அவரது இல்லத்தில் இன்று (ஜூலை 23) சந்தித்தனர்.

இது மரியாதை நிமிர்த்தமான சந்திப்பு எனப் பாஜகவினர் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பின்போது பாஜக மாநில தலைவர் எல். முருகன், பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று நீட் தேர்வு குறித்து தீவிர விவாதம் நடந்த நிலையில், அது குறித்து ஆளுநரிடம் மனு அளிக்க பாஜக எம்எல்ஏக்கள் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆளுநரை சந்தித்தபின் பாஜக தலைவர் முருகன், எம்எல்ஏக்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்காமல் சென்று விட்டனர்.

இதையும் படிங்க:தமிழ்நாட்டின் பொருளாதார வல்லுநர் குழு உணர்த்தும் செய்தி என்ன?

ABOUT THE AUTHOR

...view details