தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைத்த பாஜகவினர் 15 பேர் மீது வழக்குப்பதிவு - பாஜக

சென்னையில் அனுமதியின்றி வைக்கப்பட்டு அகற்றப்பட்ட பாஜக கொடிக் கம்பத்தை மீண்டும் வைத்த 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைத்த பாஜகவினர் 15 பேர் மீது வழக்கு பதிவு
அனுமதி இன்றி கொடிக்கம்பம் வைத்த பாஜகவினர் 15 பேர் மீது வழக்கு பதிவு

By

Published : Sep 27, 2022, 9:06 PM IST

சென்னை: மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் வைக்கப்பட்ட பாஜக கொடிக்கம்பம் அனுமதியின்றி வைக்கப்பட்டதால் மாநகராட்சி ஊழியர்கள் கொடிக்கம்பத்தை அகற்றினர். இனையடுத்து, அகற்றப்பட்ட கொடிக்கம்பத்தை மீண்டும் பாஜகவினர் வைத்ததால் காவல்துறையினர் கொடிக்கம்பத்தை மீண்டும் அகற்றி அதனை வைத்த பாஜகவினர் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள தனியார் அடுக்குமாடி கட்டடத்தின் கேட் பகுதியில் எவ்வித முன் அனுமதி பெறாமல் பாஜக கட்சி சேர்ந்த ஆலந்தூர் மண்டல மீனம்பாக்கம் பகுதி துணைத்தலைவர் கருணாநிதி என்பவர் பாஜக கொடிக்கம்பம் ஒன்றை நேற்று(செப்.26) மாலை வைத்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு, கொடிக்கம்பத்தை மா அகற்றினர். அதன்பின் ஆலந்தூர் மண்டல பாஜக துணைத் தலைவர் கருணாநிதி தலைமையிலான 20-க்கும் மேற்பட்டோர் கொடி கம்பத்தை மீண்டும் அதே இடத்தில் நிறுவியுள்ளனர். இதனால் மாநகராட்சி அலுவலர்கள் மீனம்பாக்கம் காவல்துறையினர் உதவியோடு கொடிக்கம்பத்தை அகற்றினர். அதைத்தொடர்ந்து 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அண்ணா சிலை அவமதிப்பு வழக்கு - பாஜகவை சேர்ந்த 3 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details