தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிறிஸ்தவத்திற்கு மாறிய பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு - தீர்மானத்தை எதிர்த்து பாஜகவினர் வெளிநடப்பு!

கிறிஸ்தவத்திற்கு மாறிய பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படமுடிவு எடுக்கப்பட்ட நிலையில், பாஜக வெளிநடப்பு செய்ததன் மூலம் சரியான தீர்மானத்தைக் கொண்டு வந்திருக்கிறோம் என்பது தெரிகிறது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தீர்மானத்தை எதிரித்து பாஜகவினர் வெளிநடப்பு
தீர்மானத்தை எதிரித்து பாஜகவினர் வெளிநடப்பு

By

Published : Apr 19, 2023, 3:26 PM IST

சென்னை:பட்டியலின இட ஒதுக்கீடு உரிமைகளை சீக்கியம், பவுத்த மதங்களுக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கு வழங்கியதுபோல கிறிஸ்தவத்திற்கு மாறியவர்களுக்கும் வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தை கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக-வினர் வெளிநடப்பு செய்தனர்.

இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தினபடி பட்டியலின மக்களுக்கான பாதுகாப்பு உரிமைகள், இடஒதுக்கீடு மற்றும் சலுகைகளை, கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதி திராவிடர்களுக்கும் வழங்கக்கோரி, அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர ஒன்றிய அரசை வலியுறுத்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்த பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். இதனால், சட்டப்பேரவை சிறிது நேரம் சலசலப்பாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த தீர்மானம் ஏனோ தானோ என கொண்டு வரப்படவில்லை. இந்த தீர்மானத்தின் மீது பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொண்டு, சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசிய பிறகுதான் இதனை முன்மொழிந்திருக்கிறோம்.

சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இந்த தனித்தீர்மானத்தை கண்டித்து, பாஜக வெளிநடப்பு செய்ததன் மூலம் சரியான தீர்மானத்தைத் தான் கொண்டு வந்திருக்கிறோம் என்பது தெரிகிறது” எனப் பேசினார்.

இதையும் படிங்க:கிறிஸ்தவ மதத்துக்கு மாறிய ஆதிதிராவிடர்களுக்கும் சலுகைகள்: முதலமைச்சர் தனித்தீர்மானம்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details