சென்னை:தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாஜக சார்பில் நியாய விலைக்கடைகளில் பிரதமர் மோடி புகைப்படத்தை வைத்து வருகின்றனர். இதனால் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவினர் மற்றும் பாஜகவினருக்கு மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் மண்டலத்தலைவர் கணேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்துடன் ஊர்வலமாக வந்து, தாம்பரம் கடப்பேரி எம்.இ.எஸ் சாலையில் உள்ள நியாய விலைக்கடையின் உள்ளே புகைப்படத்தை வைத்தனர்.