சென்னை: பிரபல சினிமா நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி, மகளிர் சுய உதவிக் குழுவிற்கு வங்கியில் லோன் வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை பெற்றுக்கொடுத்துவிட்டு, தற்போது கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக நேற்று (செப்.13) கீதா என்பவர் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
இதனைத் தொடர்ந்து தன் மீது கீதா பொய் புகார் அளித்துள்ளதாக கூறி நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி இன்று (செப்.14) காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கந்துவட்டி புகார்
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயலட்சுமி, "2019ஆம் ஆண்டு கரோனா காலத்தில் வேலையில்லாமல் தவிப்பதாக கூறி கீதா என் வீட்டிற்கு வந்து அழுததால், என்னால் முடிந்த தொகையை கொடுத்து உதவினேன். இந்த பணத்தை கீதா ஐந்து மாதங்களுக்குள் திருப்பி தருவதாக கூறி கையெழுத்திட்ட வெற்று காசோலையை என்னிடம் கொடுத்து சென்றார்.
கீதா பல பெண்களை என்னிடம் அழைத்து வந்து அவர்கள் பாஜகவில் சேர விரும்புவதாக தெரிவித்தார். மேலும், அவர்களது பிள்ளைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த பணமில்லை எனக் கூறியதால் மனமுருகி பணம் அளித்துள்ளேன்.