தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேல் யாத்திரைக்கு காவல்துறை அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது - பாஜக - bjp Vel pilgrimage

சென்னை: வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது என்று டிஜிபியை சந்தித்த பிறகு பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

bjp
bjp

By

Published : Nov 4, 2020, 3:23 PM IST

பாஜக துணை தலைவர் எம்.என்.ராஜா, மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி திரிபாதியை இன்று சந்தித்தனர். இதையடுத்து கரு.நாகராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "வெற்றிவேல் யாத்திரைக்கு அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை இருக்கிறது. யாத்திரைக்கு டெல்லியில் இருந்து உள்துணை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி வருகை தர உள்ளார். அகில இந்திய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பங்கேற்க உள்ளார். அது தொடர்பாக டிஜிபியிடம் தகவல் தெரிவித்துள்ளோம்.

அனுமதி கிடைக்கும் என நம்புகிறோம். வழக்கு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது. தீர்ப்பு இன்னும் வரவில்லை. திருமாவளவன் யாத்திரையை தடுக்க முயற்சி செய்துவருகிறார். அதனை முறியடிப்போம்" என்றார்.

டிஜிபியை சந்தித்த பிறகு பாஜகவினர் செய்தியாளர் சந்திப்பு

எம்.என்.ராஜா கூறுகையில், "வழக்கு தொடர உரிமை இருக்கிறது. எங்களுடைய வாதங்களை சொல்ல எங்களுக்கு உரிமை இருக்கிறது. வழக்கறிஞர் பிரிவு வாதங்களை முன்வைப்பார்கள். வெற்றிவேல் துள்ளி வரும். தமிழக்கு முக்கியத்துவம் கொடுத்து வருபவர் பிரதமர் மோடி. திருக்குறளையும் திருவள்ளுவரையும் உலகெங்கும் கொண்டு சென்றவர் மோடி. தமிழுக்கு உண்டான அத்தனை உரிமைகளையும் கொடுப்பார்" என்றார்.

இதையும் படிங்க:வேல் யாத்திரை ஒரு அரசியல் நாடகம் - திருமாவளவன்

ABOUT THE AUTHOR

...view details