தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து: மன்னிப்பு கேட்க தயார் - எஸ்.வி.சேகர் - பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சர்ச்சை கருத்து

பெண் பத்திரிகையாளர் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாக கருத்து பதிவிட்ட விவகாரத்தில் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்பதாக பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மன்னிப்பு கேட்க எஸ்.வி.சேகர் தயார்
மன்னிப்பு கேட்க எஸ்.வி.சேகர் தயார்

By

Published : Mar 12, 2022, 3:59 PM IST

சென்னை: பெண் பத்திரிகையாளர்கள் பற்றி நடிகர் எஸ்.வி.சேகர் தனது சமூகவலைதளத்தில் சர்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டதால், அவர் மீது மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.வி.சேகர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், ஏற்கனவே பெண் பத்திரிகையாளர் பற்றி சமூகவலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது நீக்கப்பட்டு மன்னிப்பும் கேட்கப்பட்டதாக தெரிவித்தார். நீதிமன்றத்திலும் மற்றொரு முறையும் மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்தார்.

காவல்துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கோகுலகிருஷ்ணன், இது தொடர்பாக காவல்துறை சார்பில் பதில் மனுத் தாக்கல் செய்வதாக தெரிவித்ததையடுத்து வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க:குற்றச்சாட்டு குறிப்பாணை ரத்து செய்யக் கோரிய வழக்கு - மனுதாரர்களின் கோரிக்கை நிராகரிப்பு

ABOUT THE AUTHOR

...view details