தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'அதிமுக அமைச்சர்களின் கருத்துக்களை பொருட்படுத்துவதில்லை' - கரு.நாகராஜன்

சென்னை : தேர்தல் கூட்டணி தொடர்பான தமிழ்நாடு அமைச்சர்களின் கருத்துக்களை பொருட்படுத்துவதில்லை என பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

அதிமுக அமைச்சர்களின் கருத்துக்களை பொருட்படுத்துவதில்லை - பாஜக
அதிமுக அமைச்சர்களின் கருத்துக்களை பொருட்படுத்துவதில்லை - பாஜக

By

Published : Sep 5, 2020, 5:03 PM IST

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனாரின் 149ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நடிகர் ராதாரவி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வ.உ.சி.யின் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், "அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சியின் தலைவர்களும் பேசிக் கொள்வதே சரியானதாகும். கூட்டணி தொடர்பான அமைச்சர்களின் கருத்துக்களை நாம் பொருட்படுத்த வேண்டியதில்லை.

கூட்டணி தொடர்பாக பொதுவெளியில் யாரும் பேசக் கூடாது என்று அதிமுக தலைமை தான் கட்டளை இட்டுள்ளது. பாஜகவினர் யாரும் அமைச்சர்களுக்கு கட்டளையிடவில்லை. நடிகர் ரஜினிகாந்த் ஒரு தனி மனிதர் என்பதால், அவர் யாரை வேண்டுமானாலும் வாழ்த்தலாம். அரசியல் தலைவராக ரஜினி மாறினாலும், பிறரை வாழ்த்துவதில் தவறில்லை.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட நயினார் நாகேந்திரன் விருப்பம் தெரிவித்துள்ளார். வேட்பாளர் யார் என்பது குறித்து விரைவில் கட்சித் தலைமை அறிவிக்கும்" என தெரிவித்தார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details