தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தேசத்தின் எதிரியான திமுக ஆட்சிக்கு வரக்கூடாது' எல்.முருகன் - தேசத்தின் எதிரி திமுக

சென்னை: தேசத்தின் எதிரியான திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே நம் நோக்கம் என்றும், பாஜகவினர் போர் வீரர்களாக செயல்பட வேண்டும் என, மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

bjp
bjp

By

Published : Feb 18, 2021, 8:34 PM IST

சிங்காரவேலரின் 162ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை தி.நகரிலுள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சிங்காரவேலன் திருவுருவப் படத்திற்கு பாஜக சார்பில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை இணையமைச்சர் வி.கே.சிங், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

அதன்பிறகு சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டத்திலுள்ள பாஜகவின் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர்கள், அமைப்பாளர்களுடன் பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் கிஷன் ரெட்டி, இணை பொறுப்பாளர் வி.கே.சிங் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன், சி.டி.ரவி, சுதாகர் ரெட்டி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அப்போது எல். முருகன் பேசியதாவது,"தேசத்தின் எதிரியான திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பதே நம் நோக்கம். அதற்காக, போர் வீரர்களாக நாம் செயல்பட வேண்டும். வரவிருக்கும் தேர்தலில் அனைவரின் பங்களிப்பு மிக அவசியம். தேர்தல் பொறுப்பாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டும். இந்த தேர்தல் நம் கட்சிக்கு முக்கியமான வளர்ச்சியை தரும்" என்றார்.

இதையும் படிங்க: புதிய கல்விக் கொள்கை உலகத் தரத்திலான கல்வியை வழங்கும் - பாஜக தலைவர் முருகன்!

ABOUT THE AUTHOR

...view details