தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'சசிகலா விரைவில் குணமடைய வேண்டும்' - பாஜக தலைவர் எல். முருகன் - sasikala

சென்னை: சசிகலா விரைவில் குணமடைய வேண்டும் என்றும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தமக்கு எந்த சந்தேகமும் இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

சென்னை
சென்னை

By

Published : Jan 23, 2021, 1:47 PM IST

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கு, அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பின்னர் திமுக, காங்கிரஸ் கட்சிகளிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தவர்களுக்கு, உறுப்பினர் அட்டையை மாநில தலைவர் எல்.முருகன் வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தைப்பூச திருநாளுக்கு விடுமுறை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி. கரோனாவை கட்டுப்படுத்துவதிலும், தடுப்பூசி வழங்குவதிலும் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக, பிரதமர் மோடி திகழ்கிறார். இதுவரை 96 நாடுகளுக்கு கரோனா தடுப்பூசியை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது.

வரும் 27ஆம் தேதி பழனியில் நானும், தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவியும் காவடி எடுக்க உள்ளோம். வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியால் ஓரிடத்திலாவது தனித்து போட்டியிட முடியுமா?, தமிழைப் பற்றிப் பேச ராகுல் காந்திக்கு அருகதை இல்லை. அவரால் ஒரு திருக்குறளை சொல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார்.

பாஜகவில் எந்த கேங்ஸ்டரையும் சேர்ப்பதில்லை. விவசாயிகளின் போராட்டம் தூண்டிவிடப்பட்ட ஒன்றாகும். குடியரசு தின விழாவில் விவசாயிகள் போராடுவது என்பது, விவசாயிகளின் பெயரில் "Urban Naxals" தான் போராடுகிறார்கள் என்றுதான் அர்த்தம். சசிகலா விரைவில் குணமடைய வேண்டும். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் தமக்கு எந்த சந்தேகமும் கிடையாது. திமுக - காங்கிரஸ் கட்சி கூட்டணி விரைவில் உடையும். திமுக, காங்கிரஸ் கூட்டணிதான் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details